சின்னம்மாவை புறக்கணிக்கும் அமமுக நிர்வாகிகள்!

சசிகலா, தினகரன்
சசிகலா, தினகரன்

நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தற்போது தஞ்சாவூரில் தங்கி இருக்கிறார் சசிகலா. அங்கே அவரைச் சந்திக்கவோ, அவரது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ அமமுக நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை.

முன்பெல்லாம் சசிகலா எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள அமமுக நிர்வாகிகள் அவருக்கு தடபுடல் வரவேற்புக் கொடுத்து அசத்துவார்கள். தற்போது சசிகலா - தினகரன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் சசிகலாவும் அமமுகவைப் பற்றி கவலைப்படாமல் அதிமுகவுக்கே உரிமைக் கொண்டாடி வருகிறார், எனவே, அவரை வரவேற்கவோ, சந்திக்கவோ வேண்டாம் என தினகரன் தரப்பிலிருந்து வாய்மொழி உத்தரவு போடப்பட்டுள்ளதாம். இதனால் தான் இப்போதெல்லாம் அமமுக நிர்வாகிகள் சின்னம்மாவைப் புறக்கணிக்கிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in