அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஆள் தவறாமல் ஆஜர்!

அங்காளபரமேஸ்வரி கோயிலில் துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர்...
அங்காளபரமேஸ்வரி கோயிலில் துர்கா ஸ்டாலின் குடும்பத்தினர்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கீழப்பெரும்பள்ளம் பிரசித்திபெற்ற கேது தலம். இங்குள்ள தனது தந்தை வழி குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி கோயிலை சுமார் 4 கோடி ரூபாய் செலவில் கருங்கல் திருப்பணி செய்த துர்கா ஸ்டாலின், அதன் குடமுழுக்கு விழாவை இன்று நடத்தினார். பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் குடமுழுக்கை நடத்தி வைத்தார்கள்.

இதற்காக கடந்த நான்கு நாட்களாக இங்கேயே தங்கி இருக்கிறார் துர்கா. தங்கள் தலைவரின் துணைவியார் இங்கே இருக்கும்போது நாம் போகாமல் இருந்தால் சரியாக இருக்காது என நினைத்த திமுக விஐபி-க்கள் பலரும் கீழ்ப்பெரும்பள்ளத்துக்கு விசிட் அடித்து துர்காவிடம் ஆஜர் கொடுத்துவிட்டுத் திரும்பினார்கள். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மெய்யநாதன், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் மட்டுமல்லாது டி.ஆர்.பி. ராஜா, முத்துராஜா, நிவேதா முருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்களும் அழைக்காமலே வந்து துர்காவிடம் ஆஜர் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in