நாகரிகம் படிக்கணும் நாகர்கோயில் மேயர்!

மேயர் மகேஷ்
மேயர் மகேஷ்

“பொது இடங்களில் கவனமாக இருங்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னதான் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருந்தாலும் கட்சியினர் அதுபற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அதற்கு அண்மை உதாரணம் இந்தச் சம்பவம்.

நாகர்கோவிலில் நடந்த இந்தி எதிர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு திமுகவினர் கட்சிக் கொடிகளைக் கட்டி இருந்தனர். அதற்கு ஊடாக பாஜகவினரும் காவிக் கொடிகளைக் கட்டி திமுகவினரைக் கடுப்பேற்றினார்கள். இதையடுத்து, நாகர்கோவில் திமுக மேயரான மகேஷ் தானே களத்துக்குப் போய் காவிக்கொடிகளை அகற்றினார். உடனே இந்த விவகாரத்தை போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போனார்கள் பாஜககாரர்கள்.

அப்படியும் உஷ்ட்ணம் குறையாத மகேஷ், மேடையில் பேசும்போது, “பாஜகவினர் எங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கையையோ, தலையையோ நீட்டினால்...” என பேச்சை நிறுத்திவிட்டு ‘தலையைச் சீவிவிடுவேன்’ என்பது போல் செய்கை செய்தார். இதைக் கேட்டு திமுகவினர் ஆர்ப்பரிக்க, மகேஷ் செய்கை காட்டியதை வீடியோ எடுத்த ஒருவர், அதை அப்படியே சமூகவலைதளத்தில் போட்டு வைரலாக்கிவிட்டார்.

இது போதாதா... இதையும் போலீஸ் பஞ்சாயத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்திருக்கிறார் நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்தி. முப்பது ஆண்டுகளாக வக்கீல் தொழிலில் இருக்கும் மகேஷுக்கு, இப்படியெல்லாம் சைகை காட்டினால் சிக்கல் வரும் என்று தெரியாதா... எதற்கு இந்த வேண்டாத வேலை” என்று திமுகவினரே புலம்புகிறார்கள் இப்போது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in