மீண்டும் ஓரங்கட்டப்படும் பழனிமாணிக்கம்?

பழனிமாணிக்கம்
பழனிமாணிக்கம்

ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுக செயலாளராக தனி ராஜ்ஜியம் நடத்தியவர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். ஏனோ தெரியவில்லை... கருணாநிதி காலத்திலிருந்தே இவருக்கும் ஸ்டாலினுக்கும் செட் ஆகவில்லை. இதனால் ஒருகட்டத்தில் தன்னை கனிமொழியின் ஆதரவாளராகக் காட்டிக்கொண்டார். இந்த அடையாளமே 2014 மக்களவைத் தேர்தலில் இவருக்கு சீட் கிடைக்கவிடாமல் செய்தது. சீட் கொடுக்காததோடு அல்லாமல் மாவட்ட செயலாளர் பதவியும் பழனிமாணிக்கத்திடம் இருந்து வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டது. இத்தனைக்குப் பிறகும் அமைதியாக இருந்த இவருக்கு, 2019 மக்களவைத் தேர்தலில் சீட் கொடுத்தது தலைமை. தேர்தலில் வென்று எம்பி ஆனதும், பழைய செல்வாக்கை மீண்டும் பெற்றுவிடலாம் என நினைத்தார் பழனிமாணிக்கம். ஆனால், நிலைமை இன்னும் மோசமானது தான் மிச்சம். முன்பெல்லாம்கூட தஞ்சை திமுகவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் கட்சிப் பொறுப்பில் இருப்பார்கள். ஆனால், இப்போது மருந்துக்குக்கூட இவரது ஆதரவாளர்கள் யாருக்கும் பதவி கிடைக்கவில்லையாம். இதைக் கண்டித்து பழனிமாணிக்கத்தின் ஆதரவாளர்கள் கட்சி தஞ்சை திமுக அலுவலக வாசலிலேயே போராட்டம் நடத்தியும் பலன் இல்லை. இது ஒருபக்கம் என்றால், மாவட்ட கழக கூட்டங்கள் நடந்தால் அதற்கும் பழனிமாணிக்கத்துக்கு முறையாக அழைப்புப் போவதில்லையாம். விஷயம் தெரிந்து, தானே போனாலும் அங்கே தனக்கான மரியாதைத் தரப்படுவதில்லை என்றும் பழனிமாணிக்கம் புலம்பித் தவிக்கிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in