வள்ளலார் விஷயத்திலும் திமுகவுக்கு திருகுவலி!

மேடையில், நெற்றியில் திருநீறு இல்லாத வள்ளலார் படம்...
மேடையில், நெற்றியில் திருநீறு இல்லாத வள்ளலார் படம்...

நாங்கள் இந்துமதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என முதல்வர் மு.க.ஸ்டாலினே அடிக்கடி பேசுகிறார். திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் இந்து மத விழாக்களில் இப்போதெல்லாம் பயபக்தியோடு கலந்துகொள்கிறார்கள். அந்தவகையில் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் பிறந்தநாளை ‘தனிப்பெரும் கருணை’ நாளாக அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

காவி உடையில், நெற்றியில் திருநீறுடன் இருந்த வள்ளுவருக்கு வெள்ளுடை தரித்ததாக பாஜக ஏற்கெனவே அரசியல் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு வள்ளலாருக்கு நடத்திய விழாவில் வழக்கமாக அவர் நெற்றியில் இருக்கும் திருநீற்றுப் பட்டை மிஸ்ஸிங். இதையும் இப்போது விவகாரமாக்கி வருகிறது பாஜக. இதனிடையே, பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான ஷோபனா ரவியும் தன் பங்கிற்கு நாசூக்காக குத்திக்காட்டி இருக்கிறார்.

இது தொடர்பாக ஷோபனா தனது முகநூல் பக்கத்தில், ‘திருநீறு இல்லாத வள்ளலார் படத்தைப் பார்த்தால் 40 வருடங்களுக்கு முன்னர் வரை வீடுகளில் வளைய வந்த பிராமண விதவைகளைப் போல் இருக்கிறது. அவர் விபூதியை அழித்தவர்களுக்கு நான் மானசீகமாக நாமம் போட்டுப் பார்க்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார். இதை அப்படியே தங்களின் அரசியல் மேடைக்குப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் பாஜக தலைகள். தலைவர் அண்ணாமலை தாயகம் திரும்பியதும் இதைக் கண்டித்தும் வீதிக்கு வீதி பேசுவார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in