டெய்சியை திமுகவுக்கு இழுக்கும் ஹெலன்!

டெய்ஸி சரண்
டெய்ஸி சரண்

தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் டெய்சி சரண் தான் சமூக வலைதளங்களில் இப்போது லேட்டஸ்ட் ட்ரெண்டிங். இவரோடு டெலிபோனில் கதைத்த திருச்சி சூர்யா சிவா, பாஜகவுக்கு குட் பை என ட்விட்டர் பதிவு போட்டிருக்கிறார். டெய்சியையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என சிலர் அழுத்தம் கொடுக்கிறார்களாம். இதைத் தெரிந்துகொண்டு டெய்சிக்கு தூது விட்டிருக்கிறதாம் திமுக.

திமுக மாநில மகளிரணி செயலாளராக அண்மையில் அறிவிக்கப்பட்ட ஹெலன் டேவிட்சன் தான் டெய்சியை திமுகவுக்கு இழுத்துவர ஸ்கெட்ச் போடுகிறாராம். ஹெலனின் இந்த முயற்சிக்கு கனிமொழியும் ஓகே சொல்லிவிட்டாராம். பேச்சுவார்த்தை ‘சுமூகமாக’ முடிந்தால் சீக்கிரமே டெய்சி கமலாலயத்தைவிட்டு அறிவாலயத்துக்குப் பயணிக்கலாம் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in