ப.சிதம்பரத்தை பட்டியலில் சேர்க்காத காங்கிரஸ் தலைமை!

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி இழப்பு விவகாரத்தை முன்வைத்து கட்சியை தூக்கி நிறுத்தும் வேலையில் மும்முரமாய் இறங்கி இருக்கிறது காங்கிரஸ் தலைமை. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் முக்கியமான 31 நகரங்களில் மார்ச் 28, 29-ம் தேதிகளில் செய்தியாளர் கூட்டங்களை நடத்தி இந்த விஷயத்தில் பாஜக அரசின் பழிவாங்கும் போக்கு குறித்து விரிவாக பேட்டியளிக்கும்படி தலைமையிலிருந்து உத்தரவு வந்ததாம்.

ஜெய்ராம் ராமேஷ் கடிதம்
ஜெய்ராம் ராமேஷ் கடிதம்

இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுப்பிய கடிதத்தில் 31 நகரங்களில் யார் யாரெல்லாம் செய்தியாளர் கூட்டங்களை நடத்த வேண்டும் என்பது குறித்த பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது. அந்த விதத்தில் சென்னைக்கு முகுல் வாஸ்னிக் பெயர் அறிவிக்கப்பட்டது. பொதுவாக, பொதுக்கூட்டமானாலும் செய்தியாளர் சந்திப்பு என்னவென்றாலும் யாரும் மறுத்துப் பேசமுடியாத அளவுக்கு அழுத்தம் திருத்தமாக கருத்துகளை எடுத்துவைக்கக் கூடியவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். அப்படிப்பட்டவரை ஏனோ இந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டுவிட்டது காங்கிரஸ் தலைமை. இவரை மட்டுமல்ல... தமிழத்தைச் சேர்ந்த யாரையுமே இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை காங்கிரஸ் தலைமை. இதுவும் இப்போது தமிழக காங்கிரஸ் மக்கள் மத்தியில் விவாதமாக வறுபட்டுக்கொண்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in