அழகிரிக்கு எதிராக அதிரடி கிளப்பும் ராஜன்!

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரிRAGU R

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களுக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரிதான் காரணம் என தினம் ஒரு நிர்வாகி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் புலம்பித் தீர்க்கிறார்கள். இதன் பின்னணியில் மாநில பொருளாளர் ரூபி மனோகரனின் கை இருப்பதாக ஆர்ப்பரிக்கிறது அழகிரி தரப்பு.

ஆனால், “இதற்கும் ரூபி மனோகரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என பேட்டி கொடுப்பவர்கள் வாண்டடாக வந்து வாக்குமூலம் கொடுக்கிறார்கள். இதனிடையே, ஆரம்பம் முதலே அழகிரிக்கு எதிராக அறிக்கைகளை அள்ளித்தெளித்து வரும் காங்கிரஸ் விவசாய அணியின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன், ‘கே.எஸ்.அழகிரி பணம் வாங்கிக்கொண்டு பொறுப்புப் போடுகிறார். அவரைக் காமராஜரின் ஆன்மாகூட மன்னிக்காது. இதைத் தட்டிக்கேட்டால் அடி, உதை என இறங்கிவிட்டார். எனவே, உடனே கே.எஸ்.அழகிரியைப் பதவி நீக்கம் செய்யவேண்டும். இல்லையென்றால் தென்மாவட்ட காங்கிரஸ் தொண்டர்களுடன் டெல்லிக்கே போய் தர்ணா போராட்டம் நடத்துவேன்’ என இன்றைக்கு ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

ஆர்.எஸ்.ராஜன்
ஆர்.எஸ்.ராஜன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in