இதுதானா சேகர்பாபுவின் அந்த இன்னொரு முகம்?

சேகர்பாபு
சேகர்பாபு

சென்னையில் முதல்வர் அடிக்கடி விசிட் அடிக்கும் கோபாலபுரம் பகுதியிலேயே தரமற்ற பணிகளால் சாலைகள் பல்லிளிப்பதாக ஏரியாவாசிகள் புலம்புகிறார்கள். இதெல்லாம் தெரிந்துதானோ என்னவோ தலைமைச் செயலாளர் இறையன்பு சென்னையில் போடப்படும் சாலைப் பணிகளின் தரத்தை அண்மையில் இரவில் போய் ஆய்வு நடத்தி இருக்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறை சார்ந்த டெண்டர்களை எடுப்பதற்குள் ஒப்பந்ததாரர்களுக்கு நாக்குத் தள்ளிவிடுகிறதாம். பெரும்பாலான டெண்டர்கள் அமைச்சர் சேகர்பாபு கைகாட்டும் நபர்களுக்கே ஜெயமாகிறதாம். அதையும் மீறி வேறு யாருக்காவது ஒன்றிரண்டு டெண்டர்கள் கிடைத்தால், “அண்ணனுக்கு ஆறு” என்று சொல்லி சேகர்பாபுவின் ஆட்கள் அங்கேயும் வந்து நிற்கிறார்களாம்.

அண்மையில் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையை செப்பனிடும் பணிக்கான டெண்டரை எடுத்ததாம் ஒரு நிறுவனம். இன்னொரு பவர்ஃபுல் அமைச்சரின் சிபாரிசில்தான் அந்த நிறுவனத்துக்கு இந்த டெண்டர் கிடைத்ததாம். ஆனால் அங்கேயும் ஆஜரான சேகர் பாபு விசுவாச வட்டம், ”அண்ணனுக்கு என்னாச்சு?” என்றதாம். விஷயத்தை தங்களுக்கு டெண்டர் பெற்றுத்தந்த அமைச்சரிடம் கொண்டு போனதாம் அந்த நிறுவனம்.

அமைதியாக அனைத்தையும் கேட்ட அமைச்சர், “அவரு சிஎம் குடும்பத்துக்கு ரொம்ப நெருக்கமா இருக்காருப்பா... அதனால கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிப் போய்க்கோங்க” என்றாராம். வெறுத்துப் போன அந்த நிறுவனம், “எங்களுக்கு இந்த டெண்டரே வேண்டாம்; ஆளைவிடுங்க சாமி” என்று சொல்லி அப்பீட் ஆகிவிட்டதாம்!

“சேகர்பாபுவுக்கு இன்னொரு முகம் இருக்கு”ன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்னாரே... அது இந்த முகம்தானோ?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in