அதனால் தான் பி.ஆர்.பாண்டியனை சந்திக்காமல் தவிர்த்தாரா முதல்வர்?

அறிவாலயத்தில் காத்திருந்த விவசாயிகள்
அறிவாலயத்தில் காத்திருந்த விவசாயிகள்

பிரதமர் மோடி விவசாயிகள் போராட்டத்தின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் நோக்கி நீதிகேட்டு நெடும்பயணம் தொடங்கி இருக்கிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். வழியில் மாநில முதல்வர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டுவது அவரது திட்டம்.

அதன்படி பயணத்தைத் தொடங்கிய நாளன்று கேரள முதலமைச்சரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.  மறுநாள்  தமிழக முதலமைச்சரை சந்திக்க அமைச்சர் துரைமுருகன்  மூலமாக நேரம்  கேட்டிருந்தனர். நிச்சயம் ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து  சென்னை அறிவாலயம் சென்றனர் விவசாயிகள் ஆனால், அவர்களை உள்ளே அனுமதிக்காமல் வெகு நேரம் காக்க வைத்திருக்கின்றனர்.

நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகே  முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் விவசாயிகளை அழைத்துச் சென்று உள்ளே அமர வைத்திருக்கின்றனர். ஆனால், பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசா சங்கத்தினர் தன்னைச் சந்திக்க காத்திருக்கும் விஷயம் தெரிந்தும் அவர்களைச் சந்திக்காமல் வேறு வழியில் அறிவாலயத்தை விட்டு கிளம்பிவிட்டாராம் முதல்வர்.

பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக நடைபெறும் இந்த பயணத்தில் உள்ளவர்களை சந்தித்தால் பிரதமரின்  கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால்தான் விவசாயிகளை சந்திக்காமல் புறக்கணித்திருக்கிறார் முதல்வர்  என்று,  காரணம் சொல்லும் விவசாயிகள் முதல்வரின் புறக்கணிப்பை கண்டித்து ஆவேசமாக தகவல்களை பரிமாறி வருகிறார்கள். 

அதேசசமயம், சாதாரண விவசாய சங்க பிரதிநிதிகளுக்கே நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார் முதல்வர். அப்படி இருக்கையில், பாண்டியன் தலைமையிலான விவசாய சங்கத்தினரை அவர் சந்திக்காமல் தவிர்த்ததற்கு மோடி விவகாரம் மட்டுமே காரணமாக இருக்காது. விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசி வரும் பாண்டியன் அறிக்கைகள், பேட்டிகளில் தெரிவித்த கருத்துகள் ஏதாவது முதல்வரை கோபப்பட வைத்திருக்கலாம். அதை உணர்த்த வேண்டும் என்பதற்காகக் கூட அவர் இப்படி புறக்கணித் திருக்கலாம்” என்றும் சிலர் சொல்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in