கார்கேயை கண்டுகொள்ளாத ப.சிதம்பரம்!

கார்கேயை கண்டுகொள்ளாத ப.சிதம்பரம்!

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட்தான் வரக்கூடும் என்ற நிலையே முதலில் இருந்ததால் ப.சிதம்பரம் அமைதி காத்தாராம். ஆனால், திடீரென காற்று திசைமாறி மல்லிகார்ஜுன கார்கேயின் பெயரை தலைமை பரிசீலனைக்கு எடுத்தது. இதை ப.சிதம்பரம் ரசிக்கவில்லையாம். கார்கேயைவிட எந்த விதத்தில் தனக்கு தகுதிக் குறைவு என்பதே அவரது ஆதங்கம் என்கிறார்கள். ஏற்கெனவே, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சசிதரூரை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார். கெலாட் சீனில் இருந்தபோது மகனின் நிலைப்பாட்டை ஆதரிக்காத சிதம்பரம், இப்போது தனது மனநிலையை மாற்றிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதனால் தான் கார்கே நேற்று சென்னை வந்தபோது சிதம்பரம் அவரைச் சந்திக்காமல் புறக்கணித்ததாகச் சொல்கிறார்கள். இத்தனைக்கும் சத்தியமூர்த்தி பவனில் சிதம்பரத்தின் பெயர் எழுதப்பட்ட இருக்கையெல்லாம் தயார் நிலையில் இருந்ததாம். ஆனாலும் சிதம்பரம் ஆப்சென்ட் ஆனது தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in