பாஜக பின்னணிதான் பள்ளி நிர்வாகம் பதறாமல் இருக்கக் காரணமாம்!

பாஜக பின்னணிதான் பள்ளி நிர்வாகம் பதறாமல் இருக்கக் காரணமாம்!

குமரி மாவட்டம், அதங்கோடு பகுதியில் உள்ள மாயகிருஷ்ணா சுவாமி வித்யாலயா பள்ளியில் படித்த 6-ம் வகுப்பு மாணவர் அஸ்வினுக்கு சகமாணவனே குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்தார். இதனால் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட அஸ்வின் சிகிச்சை பலனின்றி பலியானார். 22 நாள் சிகிச்சைக்குப் பிறகுதான் அஸ்வின் உயிரிழந்தார். அப்படி இருந்தும் ஆசிட் கலந்துகொடுத்த மாணவனை இன்னமும் போலீஸால் அடையாளம் காணமுடியவில்லையாம். தற்போது வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது. என்றபோதும் இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை மூச்சுவிடாமல் இருக்கிறது பள்ளி நிர்வாகம்.

இந்த நிலையில், “இந்தப் பள்ளி நிர்வாகக் குழுவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் புள்ளிகள் இருக்கிறார்கள். அந்த தைரியத்தில் தான் பள்ளி நிர்வாகம் தெனாவெட்டு காட்டுகிறது” என காங்கிரஸ் காரர்கள் கர்ஜிக்கிறார்கள். பள்ளியின் டிரஸ்ட் குழுவில் பாஜகவின் குமரி மாவட்டத் தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளே இருக்கிறார்களாம். அதனால் காவல்துறையும் இந்த விஷயத்தில் கவனமாகவே காலடி எடுத்துவைக்கிறதாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in