திருமாவுக்கும் செக் வைக்கும் பாஜக!

திருமாவவுடன் நிரபு
திருமாவவுடன் நிரபு

பாஜக பட்டியலின அணியின் மாநில தலைவர் தடா பெரியசாமியின் வீடு, கார் அண்மையில் தாக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசிக மீது பகிரங்கமாகவே குற்றம் சாட்டியது பாஜக. அத்துடன் சேர்த்து, விசிக தலைவர் திருமாவை திமுக தான் தங்களுக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் பாஜக தரப்பிலிருந்து சர்ச்சையைக் கிளப்பினார்கள்.

தடா பெரியசாமி வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிரபு என்பவரை கைகாட்டுகிறது பாஜக வட்டாரம். இந்த விவகாரம் தொடர்பாக திருமாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவுடன் நிரபு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கும் பாஜகவினர், பெரியசாமி வீட்டில் தாக்குல் நடத்தப்பட்ட விவகாரத்தில் திருமாவுக்கும் தொடர்பு இருக்கிறது. அவரையும் இந்த வழக்கில் சேர்த்து கைது செய்யவேண்டும் என போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in