பன்னீருக்கு பல்ஸ் ரேட்டை எகிறவைத்த அண்ணாமலை!

 எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

திமுக அரசைக் கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் பாஜக நடத்தும் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் கடலூரில்  கலந்து கொள்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் கடலூருக்கு வருவதற்கும் ஒரு சிறப்பான காரணம் இருக்கிறதாம்.

“தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம்” என  அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்  எச்சரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த கடலூர் மாவட்டத்தின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “அண்ணாமலை கரூரை விட்டுத் தாண்ட முடியாது” என்று வார்த்தைகளால் மிரட்டினார். அப்படிச் சொன்னவருக்கு, “நான் உங்கள் ஊருக்கே வந்துவிட்டேன்” என்று சொல்வதற்காகவே கடலூர் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்க அண்ணாமலை முடிவெடுத்தார் என்கிறார்கள்.

நாளைய ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கு சிக்கலை உண்டாக்கும் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைக்கலாம் என்கிறார்கள். அதேசமயம், பன்னீருக்கு பல்ஸ் ரேட்டை இன்னும் கொஞ்சம் எகிற வைப்பதற்காக, அவர் மீது அதிருப்தியில் இருக்கும் கடலூர் திமுக நிர்வாகிகள் சிலரை பாஜகவுக்கு இழுக்கவும் பேசிவைத்திருக் கிறார்களாம். நாளைய ஆர்ப்பாட்டத்தின் போது அவர்களுக்கு எல்லாம் காவித்துண்டு போர்த்தி கட்சியில் சேர்க்கப் போகிறார்களாம். இந்தத் தகவல்கள் கசிந்ததிலிருந்தே தூக்கத்தைத் தொலைத்துவிட்ட பன்னீர்செல்வம், அதிருப்தி யாளர்களை தக்கவைக்க அவர்களுக்கு ஆள் அனுப்பிப் பேசிக்கொண்டிருக்கிறாராம்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in