ஓபிஎஸ்ஸை ஒரேயடியாக ஓரங்கட்டும் தமிழக பாஜக!

ஓபிஎஸ்
ஓபிஎஸ்முற்றிலும் ஓரங்கட்டிய பாஜக...

எங்கு சுத்தினாலும் ஈபிஎஸ் கைக்குள் தான் அதிமுக வரும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறது தமிழக பாஜக. இருந்தாலும் ஈபிஎஸ் தரப்புக்கு அவ்வப்போது கிலி ஏற்படுத்துவதற்காக ஓபிஎஸ் தோளிலும் கைபோட்டுப் பேசி வருகிறது. அண்மையில் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள். இந்த விழாவில் ஈபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட தலைகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மாத்திரமல்ல... அதிமுக கூட்டணியில் இருக்கும் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்ததாம் பாஜக. ஆனால், ஓபிஎஸ் தரப்புக்கு எந்த அழைப்பும் போகவில்லை என்கிறார்கள். அதனால் அவர்கள் யாரும் கமலாலயத்துக்கு வரவில்லை.

இத்தனைக்கும், ஆளுநர் சிபிஆருக்கு ட்விட்டரில் வாழ்த்துச் சொல்லி இருந்த ஓபிஎஸ், பாராட்டு விழாவுக்கு தன்னையும் அழைப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தாராம். ஏற்கெனவே, “மத்திய பாஜக தலைமை எங்கள் மீதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறது. ஆனால், அண்ணாமலை தான் ஈபிஎஸ் உடனான சாதி பாசத்தில் எங்களை உதாசீனப்படுத்துகிறார்” என்று கொந்தளித்துக்கொண்டிருக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், 20-ம் தேதி ஓபிஎஸ் கூட்டியிருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கத் தயாராகிறார்களாம். அண்ணாமலையின் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை அமித் ஷாவின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஓபிஎஸ்ஸை அவருக்கு நெருக்கத்தில் இருப்பவர்கள் வலியுத்தி வருகிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in