அதிமுகவிடம் 20 தொகுதிக்கு அடிப்போடும் பாஜக!

அதிமுகவிடம் 20 தொகுதிக்கு அடிப்போடும் பாஜக!

அதிமுக கூட்டணியில் இந்தமுறை 20 மக்களவைத் தொகுதிகளைக் கேட்டுப்பெறும் முடிவில் இருக்கிறதாம் பாஜக. திமுகவின் அதிகார பலத்தை சமாளிக்க வேண்டுமானால் பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுக அணிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என சொல்கிறதாம் பாஜக தலைமை. இதற்கு ஒரே வழி சசிகலா, தினகரன், ஓபிஎஸ், ஈபிஎஸ் என அனைவரையும் கைகோக்க வைத்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை அமரவைப்பது தான் என்ற யோசனையை முன்வைக்கும் பாஜக, இது தொடர்பாக சசிகலா மற்றும் தினகரனிடம் முதல் சுற்று பேச்சுவார்த்தையை முடித்து விட்டதாகச் சொல்கிறார்கள். முன்பு பாஜக எதிர்ப்பு மனநிலையில் இருந்த சசிகலாவும் தினகரனும் அதிமுகவுக்குள் தங்களுக்கு ரீஎன்ட்ரி கிடைக்கிறது என்றதும் இப்போது மறுப்புச் சொல்லாமல் இதற்கு இசைவு தெரிவித்திருகிறார்களாம். இதன் பிரதிபலிப்பு தான் அண்மைக் காலமாக பாஜகவுக்கு ஆதரவாக தினகரன் பேசிவரும் கருத்துகள் என்றும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒருவேளை இதற்கு ஈபிஎஸ் முரண்டுபிடித்தால், பழையபடி தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி ஒன்றை பாஜக தலைமையில் அமைப்பது. அந்த சமயத்தில் நடிகர் விஜய்-ஐ அரசியல் கட்சி தொடங்க வைத்து அவரை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்வது என்ற யோசனையும் தமிழக பாஜகவிலிருந்து டெல்லி தலைமைக்குச் சொல்லப்பட்டதாம். ஆனால், இரண்டாவதாகச் சொல்லப்பட்ட யோசனையை கீப்பில் வைத்துவிட்டு முதல்கட்ட யோசனையை முன்னெடுக்கத் தொடங்கி இருக்கிறதாம் பாஜக தலைமை. 13-ம் தேதி அண்ணாமலை தமிழகம் திருபியதும் இது தொடர்பான சமிக்ஞைகள் தெரிய ஆரம்பிக்கும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in