பாக்யராஜ் வருகைக்கு விந்தியாவும் ஒரு காரணமா?

பாக்யராஜ் வருகைக்கு விந்தியாவும் ஒரு காரணமா?

ஓபிஎஸ் தரப்பில் ஆயிரம்தான் சொன்னாலும் ஒட்டுமொத்த அதிமுகவும் ஈபிஎஸ் பக்கம் இருப்பது போல் தான் வெளிப்பார்வைக்குத் தெரிகிறது. ஆனாலும் நம்பிக்கை தளராத ஓபிஎஸ், “கொஞ்சம் பொறுமையாக இருங்கள்... அனைவருமே நம் பக்கம் வருவார்கள்” என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பாக்யராஜ் ஓபிஎஸ்சை சந்தித்தபோது...
பாக்யராஜ் ஓபிஎஸ்சை சந்தித்தபோது...

இரண்டு நாட்கள் முன்னதாக தனது சொந்த மாவட்டத்தில் பத்திரிகையாளர்கைச் சந்தித்தபோதுகூட இதை அழுத்தமாகச் சொன்னாராம். இதனிடையே, கட்சி தன்னிடம் தான் இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காக முக்கிய பிரபலங்கள் சிலரை அடுத்தடுத்து ஓபிஎஸ்சை சந்திக்க வைக்கும் முயற்சிகளும் நடக்கிறதாம். அப்படித்தான் இயக்குநர் பாக்யராஜ் - ஓபிஎஸ் சந்திப்பு நடந்ததாகச் சொல்கிறார்கள். ஈபிஎஸ் பக்கம் ஸ்ட்ராங்காக நிற்கும் நடிகை விந்தியாவுக்கும் பாக்யராஜுக்கும் நீண்ட நாட்களாகவே புகைச்சல் உண்டு. பாக்யராஜ் ஓபிஎஸ்சை சந்தித்ததன் பின்னணியில் இந்த விவகாரத்தையும் கோத்துக் கொடுக்கிறார்கள் ஈபிஎஸ் வட்டாரத்தில்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in