மேயர் மகேஷுக்கு எதிராக மல்லுக்கட்டும் பாஜக!

மேயர் மகேஷுக்கு எதிராக மல்லுக்கட்டும் பாஜக!

நாகர்கோவிலில் நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய நாகர்கோவில் திமுக மேயரான மகேஷ், “நான் மேயராக இருக்கும் பகுதியில் பாஜகவினர் இடையூறு செய்தால்...” எனச் சொல்லிவிட்டு கழுத்தை அறுப்பேன் என்பது போல் செய்கை செய்தார். இது சமூகவலைதளங்களில் அப்போது வைரலானது. இதற்கு மறுநாளே அதே இடத்தில் கூட்டம் போட்டு பதில்கொடுத்தது பாஜக.

மேயர் மகேஷ்
மேயர் மகேஷ்

இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனும் நாகர்கோவில் எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்தியும் முதல்வரை நேரில் சந்தித்து, குமரி மாவட்டத்தில் ஆட்சியாளர்கள் பாரபட்சம் காட்டுவதாக புகார் மனு கொடுத்தனர். இதற்கு எவ்வித ரியாக்‌ஷனும் வராத நிலையில், ’நாகர்கோவில் மேயரை கைது செய்’ என்று பாஜகவினர் நாகர்கோவில் நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்கள். அடுத்தமாதம் வேறொரு போராட்டத்திற்காக பாஜக தலைவர் அண்ணாமலை நாகர்கோவில் வருகிறார். அதுவரைக்கும் இந்த விவகாரத்தை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கப் போகிறதாம் பாஜக முகாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in