பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அன்பில் மகேஷ்!

பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அன்பில் மகேஷ்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப்  பொறுப்பேற்றதும், இல்லம் தேடி கல்வி,  ஆசிரியர்களுடன் அன்பில்,  ஆசிரியர் மனசுப் பெட்டி என அடுத்தடுத்து பல திட்டங்களை அறிவித்தார். இதனால் ஆசிரியர்களின் அபிமானத்தைப் பெறலாம் என நினைத்தார் அன்பில். ஆனால், ரிசல்ட் தலைகீழாக மாறிப் போனது. மகேஷ் அறிவித்த திட்டங்களால் ஆசிரியர்களின் பணிச்சுமை தான் கூடியிருக்கிறதே தவிர அவர்களுக்கான பலன் ஏதுக் கிடைக்கவில்லை.

தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான சலுகைகளையும் நிதிச் சுமையைக் காரணம் காட்டி தராமல் பிரேக் போட்டுவிட்டது. இதனால் அதிருப்தியில் இருக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுடன் இணைந்து போராட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். 

இதெல்லாம் அன்பில் மகேஷுக்கு பெரிய தலைவலியாகவே மாறியிருக்கிறது. இந்த நிலையில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான முக்கியமான மூன்று சலுகைகள் பற்றிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் சேர்க்கப்படும் என்று அன்பில் மகேஷுக்கு  மேலிடம் உறுதியளித்திருக்கிறதாம்.  இதனால் சற்றே ஆறுதலடைந்திருக்கும் அன்பில் மகேஷ், ஆசிரியர்களைப் போலவே பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in