சேனல் ஆரம்பிக்க செல்வம் திரட்டும் அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலைதமிழக பாஜக தலைவர்

தங்களுடைய கருத்துகள், பேட்டிகள் ஊடகங்களில் முழுமையாக வெளியாவதில்லை என்ற ஆதங்கம் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதவிக்கு வந்த நாள் முதலே உண்டு. அந்த வருத்தத்தைப் போக்கும்விதமாக தமிழக பாஜகவுக்கென பிரத்யேக டிவி சேனல் மற்றும் யூடியூப் சேனலை ஆரம்பிப்பதற்கான வேலைகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டிருக்கிறார் அண்ணாமலை.

அமர்பிரசாத் ரெட்டி
அமர்பிரசாத் ரெட்டி

இதற்காக, அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழகத்தின் பிரபல தொழிலதிபர்களிடம் நிதி திரட்டும் பணி தற்போது நடந்துகொண்டிருக்கிறது. நூறு கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில் 60 கோடி வரைக்கும் வசூலாகிவிட்டதாக பாஜக வட்டாரத்திலிருந்து தகவல் சொல்கிறார்கள். இந்த நிதியைத் திரட்டும் பொறுப்பை தமிழக பாஜகவின் விளையாட்டு அணி துணைத் தலைவர் அமர்பிரசாத் ரெட்டி வசம் ஒப்படைத்திருக்கிறாராம் அண்ணாமலை. மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக டிவி சேனலை ஆரம்பிக்கும் வேகத்தில் இருக்கிறார்களாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in