
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அமெரிக்க பயணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அமெரிக்காவில் முன்பு பணியாற்றிய நிறுவனத்திடம் முக்கியமான டீல்களை பேசிமுடித்து பைசல் பண்ணியதும் அண்ணாமலையின் அமெரிக்க பயணத்தின் முக்கிய அஜெண்டா என்கிறார்கள்.
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் பக்கம் இருப்பதால் அவரை உருவாக்கிய அமெரிக்க நிறுவனத்தையே மக்களவைத் தேர்தலுக்கான வியூக பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள பாஜக தலைமை முடிவெடுத்து காரியமாற்றுகிறதாம். இது தொடர்பான செட்டில்மென்ட் விவகாரங்களையும் தனது அமெரிக்கப் பயணத்தின் போது சுமூகமாக முடித்துத் திரும்பி இருக்கிறாராம் அண்ணாமலை.
இதனிடையே, அண்ணாமலை தலைவராக நீடித்தால் தங்களது அரசியல் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என தமிழக பாஜகவின் முக்கிய தலைகள் சிலர் அஞ்சுகிறார்களாம். அதனால், தங்களுக்குள் இருக்கும் மனமாச்சரியங்களை எல்லாம் மறந்துவிட்டு ஓரணியாய் திரண்டு நிற்கும் அவர்கள், அண்ணாமலையை மாற்றக் கோரி டெல்லி தலைமைக்கு பலவிதத்திலும் அழுத்தம் கொடுக்கிறார்களாம். திமுக குடும்பத்து மாப்பிள்ளையும் இவர்களுடன் கூட்டுவைத்துக்கொண்டு இவர்களுக்கு தன்னால் முடிந்தளவுக்கு ’ஆதாரம்’ அளிக்கும் தகவலும் அண்ணாமலையின் கவனத்துக்கு வந்திருக்கிறதாம்.