தினகரனுடன் டீல் பேசும் அண்ணாமலை டீம்!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

அதிமுக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை லேசாக தட்டிவைத்ததால் இனிமேல் ஈபிஎஸ்ஸுடன் நேரடியாக மோத வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம் அண்ணாமலை. அதேநேரம், இனி ஓபிஎஸ்ஸை நம்பியும் பலனில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் அண்ணாமலையின் போலீஸ் மூளை, டிடிவி தினகரனை முன்னிறுத்தி ஈபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம்.

இது தொடர்பாக, தஞ்சையில் தங்கிருந்த டிடிவி தினகரனை அண்ணாமலையின் ஆலோசகர்கள் அண்மையில் சந்தித்துப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ்ஸுக்கு பக்க பலமாய் நிற்கும் ஆடிட்டரின் யோசனைப்படியே இந்த சந்திப்புகள் நடந்ததாம்.

“ஈபிஎஸ் கூடாரத்தைக் கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை. நீங்கள் முழுவீச்சில் இறங்குங்கள்; நாங்கள் துணையாக இருக்கிறோம்” என ஆலோசகர்கள் பேசியதைக் கேட்டு தெம்பாகி இருக்கும் தினகரன், அதே தெம்புடன் ஏப்ரல் 11-ம் தேதி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கிறார். இந்தப் பயணத்தின் போது தெற்கில் தினகரன் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறதாம். இந்தக் கூட்டத்தில், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக் கணக்கில் அமமுகவில் இணைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்களாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in