கனிமொழிக்கு ஆதரவாக அண்ணாமலை?

கனிமொழிக்கு ஆதரவாக அண்ணாமலை?

2-ஜி வழக்கை மீண்டும் துரிதப்படுத்தினால் கனிமொழியையும் ஆ.ராசாவையும் மீண்டும் சிறைக்கு அனுப்பி திமுகவின் இமேஜை சரிக்கலாம் என பாஜக தலைமைக்கு தமிழகத்திலிருந்து சிலர் யோசனை சொன்னார்களாம். ஆனால், அந்த யோசனைக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. “ஆ.ராசாவையும் கனிமொழியையும் டிரம்கார்டாக வைத்து தமிழகத்தில் நாம் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. இப்போது நாம் இவர்கள் இருவரையும் சிறைவைத்துவிட்டால் ஸ்டாலினுக்கு அது ரொம்பவே வசதியாகிவிடும். தெரிந்தோ தெரியாமலோ கனிமொழி மீது ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒருவித அச்சம் இருக்கிறது. எனவே, கனிமொழியும் ராசாவும் வெளியில் இருக்க வேண்டியது நமக்கு முக்கியம். அதனால் இப்போதைக்கு 2ஜி வழக்கை நாம் தொட வேண்டாம். தேவைப்பட்டால் தேர்தல் நேரத்தில் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டாராம் அண்ணாமலை. மக்களவையின் மூன்றாவது பெரியகட்சி திமுக என்ற வகையில் கனிமொழிக்கும் திருச்சி சிவாவுக்கும் அண்மையில் முக்கிய நிலைக் குழுக்களின் தலைவர் பதவிகள் அளிக்கப்பட்டன. இதுகூட ஸ்டாலினுக்கு எதிரான எங்களின் நரித்தந்திர நகர்வு தான் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in