அதிகம் ‘பார்க்க’ முடியவில்லை; அண்ணாமலையைச் சபிக்கும் அமைச்சர்கள்!

அண்ணாமலை
அண்ணாமலை

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் தாங்கள் நினைத்தபடி பெரிதாக தங்களை வளப்படுத்திக் கொள்ள முடியவில்லை என பசையான இலாக்காக்களை வைத்திருக்கும் அமைச்சர்களே புலம்பித் தவிக்கிறார்களாம். அண்மைக்காலமாக அமைச்சர்களுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்துவரும் குடைச்சல்களால் எந்த ஃபைலிலும் துணிந்து கைவைக்கத் தயங்குகிறார்களாம் அமைச்சர்கள். “ஏடாகூடமாக எதையாவது செய்து அண்ணாமலைகள் கையில் சிக்கிக் கொண்டுவிடாதீர்கள்” என தலைமையும் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறதாம். இதனால், முக்கிய அமைச்சர்களே தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்ள முடியாமல் அண்ணாமலைக்கு சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில முன்ஜாக்கிரதை அமைச்சர்கள் தங்களது வரவு செலவுகளை எல்லாம் செக் மூலமாகவே செய்துவருகிறார்களாம். தங்கள் மீது வேறெதுவும் வில்லங்க நடவடிக்கை வந்தாலும் கணக்கைக் காட்டி தப்பித்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் கணக்கு. அண்மையில் தன் வீட்டு விசேஷத்தை விமர்சையாக நடத்தி விமர்சனத்துக்கு உள்ளான அமைச்சர், வீட்டு விசேஷத்துக்கு வாழைமரம் கட்டியவர்களுக்குக்கூட செக் மூலமே பணப் பட்டுவாடா செய்திருப்பது அதில் ஹைலைட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in