அனைத்துக்கும் கணக்கு வைத்திருக்கும் அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலை

பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச்சை வைத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. “அந்த வாட்ச்சுக்கான பில்லைக் காட்டுங்களே பார்ப்போம்” என்று அண்ணாமலையை விடாமல் துரத்தி வம்புக்கு இழுத்தார் சேனாபானா. பதிலுக்கு, “ஏப்ரல் மாதம் நடை பயணம் செல்லும் போது பில்லை வெளியிடுவேன்” என்று சொன்னார் அண்ஸ். சொன்னபடி அவர் பில்லைக் காட்டுவாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், உண்மையில் வாட்ச்சுக்கான பில்லை பக்காவாக வைத்திருக்கிறாராம் அண்ணாமலை. வாட்ச் பில் மாத்திரமல்ல... இப்போதெல்லாம் சொமோட்டோவில் ஆர்டர் செய்து உணவு வாங்கினாலும் அந்த பில்லையும் ஞாபகமாக எடுத்து பத்திரப்படுத்தி வருகிறாராம் அண்ணாமலை. அந்த வகையில் அவரது காருக்கான ஒரு மாத டீசல் செலவு இப்போதைக்கு 95 ஆயிரம் ரூபாயாம். இதையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம். அதனால, அண்ணாமலையிடம் யாரும் வரவு செலவு கணக்குக் கேட்டு வம்புல மாட்டிக்காதீங்க!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in