அமைச்சருக்கு ஆமாம் சாமி போட மறுக்கும் அபூர்வா ஐஏஎஸ்?

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு

வீட்டுவசதி மற்றும் நகப்புற வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளரான அமுதாவுக்கும் சிஎம்டிஏ நிர்வாக பொறுப்பு அமைச்சர் சேகர்பாவுக்கும் அவ்வளவாய் ஒத்துப்போக வில்லையாம். அமைச்சர் தரும் எந்தப் பிளானுக்கும் அபூர்வா அத்தனை எளிதாக ஒப்புதல் அளிக்க மறுக்கிறாராம்.

அண்மையில், கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்குவது தொடர்பாக நீளமான பட்டியல் ஒன்றை அனுப்பினாராம் அமைச்சர். ஆனால், அதில் கழகத்தினரின் எண்ணிக்கை கணிசமாக இருந்ததால் அப்படியே அந்த லிஸ்ட்டை கிடப்பில் வைத்துவிட்டாராம் அபூர்வா. இந்த நிலையில், ஆய்வுக்குச் செல்லும் இடங்களுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று அபூர்வாவுக்கு ஆர்டர் போட்டிருக்கிறாராம் அமைச்சர். அதை மதித்துச் சென்றால், அமைச்சரின் ஆட்கள், அபூர்வாவை வேண்டுமென்றே மரியாதைக் குறைவாக நடத்துகிறார்களாம்.

”இந்தம்மாவுக்கும் நமக்கும் சரிப்பட்டு வராது” என முதல்வர் வரைக்கும் விஷயத்தைக் கொண்டுபோய்விட்டாராம் சேகர்பாபு. அப்படியும் அவரை எதுவும் செய்யமுடியாததால் தற்போது கிச்சன் கேபினட் வழியாக பரிகாரம் தேடும் முயற்சியில் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in