சிவசேனா சின்னம் முடக்கம்; சிந்தனையில் ஈபிஎஸ் டீம்!

சிவசேனா சின்னம் முடக்கம்; சிந்தனையில் ஈபிஎஸ் டீம்!

மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே மோதலால் சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அதிமுக கூடாரத்தைக் கிடுகிடுக்க வைத்திருக்கிறது. ஏனென்றால், அதிமுகவிலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலால் வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கிறது. மகாராஷ்ட்டிராவில் அடுத்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலின் போது சிவசேனா தனிப்பெரும் கட்சியாக இருக்கக்கூடாது, அப்போதுதான் அங்கே தங்களால் ஆட்சியமைக்க முடியும் என்பது பாஜகவின் திட்டம். இப்படியொரு திட்டம் உள்ளுக்குள் இல்லை என்றால், பெரும்பான்மையை வைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டேவுக்கே சின்னத்தை கொடுத்திருக்கலாம். அதைவிடுத்து சிவசேனாவின் சின்னத்தை முடக்கிவிட்டது பாஜக. கிட்டத்தட்ட அதேபோன்ற ஆபத்தில்தான் தற்போது அதிமுகவும் சிக்கியுள்ளது. பெரும்பான்மை ஆதரவு ஈபிஎஸ்ஸுக்கு இருந்தாலும், வழக்கைக் காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தையும் முடக்கிவிடலாம். அப்படிச் செய்தால் மட்டுமே மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கவனிக்கப்படும் கட்சியாக உருவெடுக்க முடியும்.

இந்த நிலையில், சிவசேனா சின்னம் முடக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் தரப்பு இன்னும் தெம்பாக இருக்கிறதாம். “எப்படியும் அவர்கள் நம்மிடம் வந்துதான் ஆகவேண்டும்” என்பதே அவர்களின் தெம்புக்குக் காரணம். அதேசமயம், ஒருவேளை அப்படி நடந்தால் என்ன செய்வது என்ற ஆலோசனையில் இறங்கி இருக்கிறதாம் ஈபிஎஸ் டீம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in