இதில் எளிமையெல்லாம் ஒன்றுமில்லை!

இதில் எளிமையெல்லாம் ஒன்றுமில்லை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தென்காசிக்கு ரயிலில் வந்ததை எளிமையின் அடையாளம் என்று உடன்பிறப்புகள் நெகிழ்கிறார்கள். ஆனால், அதையும் கலாய்க்கிறது அதிமுகவின் ஐடி விங்.

பொதிகை ரயிலில் பிரத்யேகமாக இணைக்கப்பட்ட பெட்டியில் மு.க.ஸ்டாலின் இருக்கும் படத்தை சமூகவலைதளங்களில் வைரல் ஆக்கி வரும் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள், ‘இந்த ரயிலில் மு.க.ஸ்டாலின் செல்வதற்காகவே பிரத்யேகமாக ‘சலூன் பெட்டி’ எனப்படும் இந்த ரயில்பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர விடுதியில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருக்கும். இந்தப் பெட்டியின் ஒருநாள் வாடகை 2 லட்சம் ரூபாய். இதில் எளிமையெல்லாம் ஒன்றுமில்லை. தென்காசியில் விமான நிலையம் இல்லை. தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி தென்காசிக்கு வரலாம் என்றால் அந்தப் பாதை சரியில்லை’ என திமுகவினரை சீண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in