அபாரமாய் வேலை செய்யும் அதிமுக ஐடி விங்க்!

அபாரமாய் வேலை செய்யும் அதிமுக ஐடி விங்க்!

திமுக பொதுக்குழுவில் இரண்டாவது முறை திமுக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், “பாத்ரூம், படுக்கையறை இரண்டையும் தவிர அனைத்துமே பொது இடங்கள்தான். அதனால் அனைவரும் பொறுப்புடன் பேசவேண்டும். மத்தளத்துக்கு இருபக்கமும் அடிபோல் நான் உணர்கிறேன். தூங்கி எழுந்தால் என்ன பிரச்சினை வருமோ என நினைத்துக் கவலை கொள்கிறேன்” என வேதனை ததும்பப் பேசினார்.

சீனியர்கள் அடக்கிவாசிக்க வேண்டும் என்பதாலேயே பொதுக்குழு என்றும் பாராமல் இந்தக் கருத்தை வெளிப்படையாகப் பேசினார் முதல்வர். ஆனால், இதை வைத்தும் அரசியல் செய்ய ஆரம்பித்திருக்கிறது அதிமுக ஐடி விங்க்.

’தூங்கி எழுந்தால் அமைச்சர் பதவி இருக்குமோ, இல்லையோ என அமைச்சர்களைக் கதறவிட்ட முன்னாள் முன்னாள் முதலமைச்சர்’ என ஜெயலலிதா படத்தையும், ‘தூங்கி எழுந்தால் அமைச்சர்களால் என்ன பிரச்சினை வருமோ என அமைச்சர்களைப் பார்த்துக் கதறிய இந்நாள் முதலமைச்சர்’ என மு.க.ஸ்டாலினின் படத்தையும் போட்டு வாட்ஸ் அப் குழுக்களில் வைரல் ஆக்கி வருகிறது அதிமுக ஐடி விங்க்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in