தங்கமணிக்கும் வலைவிரிக்கும் செந்தில் பாலாஜி!

தங்கமணி
தங்கமணி

அதிமுக ஆட்சியின் போது எடப்பாடி பழனிசாமிக்கு வலது, இடதுமாக இருந்தவர்கள் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும். ஆனால், ஆட்சி மாறியதும் தங்கமணிக்கான முக்கியத்தை தரமாகக் குறைத்துவிட்டாராம் ஈபிஎஸ். இதை தனது ஆதரவாளர்கள் மத்தியில் மனம்விட்டுப் புலம்பி வருகிறாராம் தங்கமணி.

முன்பெல்லாம், கட்சி நிர்வாகிகள் நியமனத்தின் போது தங்கமணியிடமும் தவறாமல் கருத்துக் கேட்பாராம் ஈபிஎஸ். ஆனால், இப்போது தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில்கூட தங்கமணியின் பரிந்துரைகள் சிலவற்றை புறந்தள்ளிவைத்துவிட்டாராம் ஈபிஎஸ்.

இந்த வருத்தத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஈபிஎஸ்ஸை சந்திப்பதைக்கூட தங்கமணியும் அவரது ஆதரவு வட்டமும் தவிர்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் நோட்டம் பார்த்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தங்கமணிக்கு நெருக்கமான சிலரை திமுகவுக்கு இழுப்பதற்கான பேரத்தை தொடங்கி இருக்கிறாராம். “முடிந்தால், தங்கமணியையே இந்தப் பக்கம் வரச் சொல்லுங்கள் அவருக்கு உரிய மரியாதை கிடைக்க நான் கியாரண்டி” என்று நயமாகப் பேசிவருகிறாராம் செந்தில் பாலாஜி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in