பனையூரில் ரகசிய கூட்டம்; விஜயின் ‘வாரிசு’ அரசியல்!

பனையூரில் ரகசிய கூட்டம்; விஜயின் ‘வாரிசு’ அரசியல்!

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. அஜித் நடத்துள்ள ‘துணிவு’ படமும் அதற்குப் போட்டியாகக் களமிறங்குகிறது. இதனால் தனது படத்திற்குச் சிக்கல் வந்து விடக்கூடாது என நினைக்கிறாராம் இளைய தளபதி. அதனால், ஐதராபாத் படப்பிடிப்பை முடித்துத் திரும்பியதும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பில் உள்ளவர்களை பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்திற்கு அவசரமாக வரவழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறார். ‘வாரிசு’ படத்தை சக்சஸ் ஆக்குவதற்கான சந்திப்பு இது என பொதுவாகச் சொல்லப்பட்டாலும் வெளியில் வேறுசில தகவல்களும் கசிகின்றன.

விஜய் மக்கள் இயக்கத்தினர் உள்ளாட்சித் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி சில இடங்களில் வெற்றியும் பெற்ற நிலையில், மக்களவைத் தேர்தலிலும் தனது சிப்பாய்களை களமிறக்கிப் பார்க்க நினைக்கிறாராம் இளைய தளபதி. அதற்கு, ‘வாரிசு’ வளமாகப் போகவேண்டும் என்பது அவரது திட்டம். அதையொட்டியே மன்ற நிர்வாகிகளைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். அதேசமயம், அஜித்தின் ‘துணிவு’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. அதனால், தமிழகத்தில் ‘வாரிசு’ படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் வரலாம் எனவும் கணிக்கிறாராம் விஜய். அந்த சிக்கலை ஆரம்பத்திலேயே தவிர்க்க ஏதுவாகவும் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி, சிக்னல் தரவேண்டியவர்களுக்கு சமிக்ஞை கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். வழக்கமாக ரஜினி தான், தனது படங்கள் ரிலீஸுக்கு முன்னதாக அரசியல் டயலாக் எதையாவது பேசி ரசிகர்களை உசுப்பேற்றி படத்தை ஓட்டுவர். அதே டெக்னிக்கை இப்போது விஜயும் பின்பற்றத் தொடங்கிவிட்டார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் கோத்துவிடுகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in