திராவிட மாடலில் ஆன்மிகப் பாய்ச்சல்!

சபரிமலை யாத்திரையில் மகேஷ்...
சபரிமலை யாத்திரையில் மகேஷ்...

தமிழகத்தில் பாஜக வலுவாக இருக்கும் மாவட்டங்களில் முதன்மையானது கன்னியாகுமரி. ‘திமுக இந்து விரோத கட்சி’ என்று சொல்லிச் சொல்லியே இந்த மாவட்டத்தில் பாஜகவை வளர்த்து வருகிறார்கள். இதைச் சமாளிக்க இப்போது திமுகவினரும் ஆன்மிக அன்பர்களாகவும், இந்து நேசர்களாகவும் மாற ஆரம்பித்துவிட்டார்கள்.

குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ், மாவட்டத்தில் உள்ள மிகப் பழமையான 115 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்த அதீத முனைப்பு காட்டி வருகிறார். இதற்காக 100 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்க வைத்திருக்கிறார். இந்நிலையில், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் நாகர்கோவில் மேயருமான மகேஷ், தனது சகாக்களைக் கூட்டிக்கொண்டு இன்று இருமுடி கட்டி சபரிமலை யாத்திரை புறப்பட்டிருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு அர்த்தப் புன்னகை பூக்கும் குமரி பாஜகவினர், “சாமியே இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்தவங்கள சபரிமலைக்குப் போக வெச்சோம் பாருங்க... அதுதான் எங்களோட சாதனை” என்று தம்ஸ் அப் காட்டுகிறார்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in