சுப்புலட்சுமியைப் போல் ஆ.ராசாவையும் ஒதுக்குகிறதா திமுக?

ஆ.ராசா
ஆ.ராசா

மனைவி, மகன் உள்ளிட்டவர்கள் கோயிலுக்கு செல்வது ஒருபுறம்,  ஆர்எஸ்எஸ் கொள்கைகளுக்கு ஒத்துப்போவது மறுபுறம் என பெரியாரின் பகுத்தறிவுப் பாதையிலிருந்து மெல்ல விலகிச் செல்கிறார் ஸ்டாலின் என்று திமுகவில் இருக்கும் பெரியார் அபிமானிகளும், திகவினரும் மனவேதனையில் இருக்கிறார்களாம்.

இந்த நிலையில்,  பெரியார் தீவிரமாக எதிர்த்த  மனுதர்மத்தில்  சொல்லப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி பொதுவெளியில்  பேசிய ஆ.ராசாவுக்கு எதிராக இந்துமத அபிமானிகளும் இந்து அமைப் புகளும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக நிற்கவேண்டிய  திமுக பெரிதாக ரியாக்ட் செய்யாமல் இருக்கிறது. அதேசமயம், திமுகவுக்கு வெளியிலிருந்து திகவும்,  சீமானும் ராசாவுக்கு ஆதரவாகப் பேசிவருகிறார்கள். திமுகவுக்குள்ளிருந்து யாரும் ராசாவுக்கு ஆதரவாகப் பேசத் தயாரில்லை. மாறாக, ராசாவின் பேச்சை அறிவாலயத்துப் புள்ளிகள் சிலரே விமர்சனம் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, பெரியார் பெருந்தொண்டரான சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவைவிட்டு தானாக விலகும் சூழலுக்கு ஆளானதைப் போல ஆ.ராசாவும் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்படுவதாக திமுகவில் உள்ள பெரியாரிஸ்ட்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.  இதை தீர்க்க வேண்டிய பொறுப்பு ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in