தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது: இந்து மகாசபா திடீர் எதிர்ப்பு

தமிழக, கேரள முதல்வர்கள்.
தமிழக, கேரள முதல்வர்கள்.தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது: இந்து மகாசபா திடீர் எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்கும் நிகழ்விற்கு அனுமதி அளிக்கக்கூடாது என அகில பாரத இந்து மகாசபா என்னும் அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கும் புகார் கொடுத்துள்ளனர்.

தோள் சீலைப் போராட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த முக்கிய போராட்டம் ஆகும். அதன் துவக்கம் நடந்து 200 ஆண்டுகளானதை நினைவுப்படுத்தும் வகையில் தோள் சீலைப் போராட்டம், 200-வது ஆண்டு நிறைவு நிகழ்வு நாகர்கோவிலில் நடக்கிறது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் இதற்கான நிகழ்ச்சி ஏற்பாட்டில் தீவிரமாக உள்ளனர்.

தா.பாலசுப்பிரமணியன்,
தா.பாலசுப்பிரமணியன்,தமிழக, கேரள முதல்வர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது: இந்து மகாசபா திடீர் எதிர்ப்பு

இந்த நிலையில் அகில பாரத இந்து மகாசபா அமைப்பின் மாநிலத் தலைவர் தா.பாலசுப்பிரமணியன், குமரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், “குமரி மாவட்டத்தில் சாதி மோதல்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். இப்போது 200 ஆண்டுகளுக்கு முன்பு சாதிப் பாகுபாடு இருந்தது என சொல்லும் நோக்கத்தில் பிரிவினையைத் தூண்டும் வகையில் இந்நிகழ்வை நடத்துகின்றார்கள். இதே தோள் சீலைப் போராட்டத்தில் 100, 150-வது ஆண்டு நிறைவு விழா எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இதை ஏன் நடத்த வேண்டும்? இருமாநில முதல்வர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வுக்கு அனுமதி அளிக்கக்கூடாது ”என அதில் கூறப்பட்டுள்ளது.

இருமாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ள நிகழ்வுக்கு எதிராக இந்து அமைப்பினர் போர்க்கொடி பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in