கொலை செய்யப்பட்ட மணிகண்டன்
கொலை செய்யப்பட்ட மணிகண்டன்இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிகண்டன்

ஏட்டு மனைவியுடன் ஏற்பட்ட கூடாநட்பு: கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி

ஏட்டு மனைவியுடன் ஏற்பட்ட கூடா நட்பால் கூலிப்படையை ஏவி இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். (45). சோலையழகுபுரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வந்த மணிகண்டன், இந்து மக்கள் கட்சி மதுரை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு தனது கடைக்குச் செல்வதற்காக எம்கே புரம் அருகே மணிகண்டன் வந்த போது மர்மக்கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

அங்கு அருகில் இருந்தவர்கள் மணிகண்டனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், ஏட்டு ஒருவரின் மனைவியுடன் ஏற்பட்ட கூடாநட்பின் காரணமாகவும், கொடுத்த நகையைத் திருப்பிக் கேட்டதாலும் கூலிப்படையை ஏவி மணிகண்டன் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதில் ஏட்டு உள்பட 7 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படை ஏவி கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in