ஜிப்மர் மருத்துவமனையில் இனி இந்தி தான்!: சர்ச்சையை கிளப்பும் சுற்றறிக்கை

ஜிப்மர் மருத்துவமனையில் இனி இந்தி தான்!:  சர்ச்சையை கிளப்பும் சுற்றறிக்கை
மருத்துவமனை ஒன்றில்

இந்தியை முன்வைத்து சமீபகாலமாக பெரும் சர்ச்சை கிளம்பிவரும் நிலையில் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையின் அலுவலக மொழியாக இந்தியை பின்பற்றக்கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது புதுவை ஜிப்மர் மருத்துவமனை. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர், புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ஜிப்மர் மருத்துவமனையிலும், மருத்துவக் கல்லூரியிலும் பயன்படுத்தப்படும் அனைத்து அலுவலக பதிவேடுகள், பணியாளர் புத்தகம், பணியாளர் பதிவுகள் ஆகியவை அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கவேண்டும். எதிர்காலத்தில் இவை அனைத்தும் இந்தி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அனைத்துத் துறைத் தலைவர்களும் இதை உறுதி செய்யவும், ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் இந்தித்துறையை அணுகலாம்" எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் முழுக்க இந்திமயமாக ஜிப்மரை மாற்ற முயலும் இந்த சுற்றறிக்கை கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பின் வடிவம் தான் இது என பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. வரும் 10ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு ஜிப்மர் மருத்துவமனை முன்பு மதிமுக சார்பில் இதனைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.