ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வரும் 4ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 19ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20ம் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும், உடலில் காயங்கள் இல்லை எனவும், கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு எனவும், மருத்துவ அறிக்கையில் காயங்கள் இல்லை எனவும் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முறையீடு செய்தனர். ஆனால் நாளைய வழக்குகளுக்கான பட்டியலில் ஏற்கெனவே தயாராகி விட்டதால் ஜெயக்குமாரின் மனுவை வரும் 4ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in