`தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது'- பிரதமரின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

`தாயை இழந்த துயரம் எவராலும் தாங்க முடியாது'- பிரதமரின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

"பிரதமர் மோடியின் தாயார் மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்" என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீராபென்னுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயின் இழப்பை யாராலும் தாங்க முடியாது. உங்கள் இழப்புக்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் இருந்த நினைவுகளில் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்" என்று கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவு மிகவும் வருந்ததக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in