தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ஹெல்த்வாக் சாலை திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேக சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசும் போது, ”நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்கு ஹெல்த்வாக் என்ற சாலை அமைக்கப்பட்டிருந்தது. மக்களிடையே நடை பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
இந்த சாலைகள் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. 8 கிலோமீட்டர் என்பது 10 ஆயிரம் அடிகளாகும். தினமும் ஒருவர் பத்தாயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே 8 கி.மீ., தூரத்துக்கு அமைத்துள்ளதாக கூறினார்கள்.
தமிழ்நாட்டுக்கு திரும்பியதும் இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் தெரிவித்தேன். உடனடியாக 38 மாவட்டங்களிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஹெல்த்வாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் நடப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் முத்துலட்சுமி ரெட்டி பூங்காவில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வழியாக அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பூங்கா வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4ம் தேதி காலை 6 மணிக்கு, திட்டத்தை தொடங்கி வைத்து அவர் நடை பயிற்சி மேற்கொள்ள உள்ளார்” என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!