அதிமுக தலைமை அலுவலக கதவு உடைப்பு... ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலால் பதற்றம்!

அதிமுக தலைமை அலுவலக கதவு உடைப்பு... ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலால் பதற்றம்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு ஈபிஎஸ் சென்றுள்ள நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்றார். இதனால், ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கத்திக்குத்து விழுந்ததால் கட்சி அலுவலகத்தில் பதற்றம் நிலவுகிறது.

கடந்த 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் களேபரத்துக்கு மத்தியில் முடிவடைந்தது. அதேநேரத்தில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்தாக ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அறிவித்தனர். இதையடுத்து, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அவைத் தலைவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அவைத் தலைவரை தேர்ந்தெடுத்ததற்கு தடை விதிக்கக் கோரியும் பொதுக்குழுவுக்கு தடை கோரியும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கில் இன்றும் சற்று நேரத்தில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

முன்னதாக, ஈபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க மறுத்துவிட்டதோடு, இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியிருந்தது. இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதனிடையே, சென்னை வானகரத்தில் இன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அதிகாலையிலேயே ஈபிஎஸ் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டுச் சென்றார். ஓபிஎஸ் வருகையால் இருதரப்பு ஆதரவாளர்களும் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். இதனால், ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் ஓபிஎஸ் தலைமை அலுவலகம் வந்தார். பூட்டப்பட்டிருந்த தலைமை அலுவலகத்தின் கதவை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த ஈபிஎஸ் பேனரை கிழித்து எறிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in