`அம்மாவிற்கே தெரியாமல் இதைச் செய்தார்’ - வைத்திலிங்கம் மீது ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``வைத்திலிங்கம் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருக்கும் போது அம்மாவிற்கே தெரியாமல் பெரிய தொழில் நிறுவனங்களிடம் கமிஷன் கேட்டு ஊழல் செய்துள்ளார்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, ‘’ அதிமுகவில் மட்டும் தான் உயிரிழந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு உள்ளது. வைத்திலிங்கம் என்னைக்குறித்தும், ஈபிஎஸ் மற்றும் காமராஜ் குறித்தும் வசைப்பாடியுள்ளார்.

உள்ளத்தில் குழந்தையாகவும், எண்ணத்தில் இனிமையாகவும் இருக்க வேண்டும். அப்படி இருப்பதில் என்ன தவறு இருக்கிறது. விளையாட்டு பிள்ளையாக இருக்கலாம், ஆனால் வைத்திலிங்கம் போல விளங்காதப் பிள்ளையாகத் தான் இருக்கக்கூடாது. ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தோல்விகளை சந்தித்தது என்றால் அதற்கு ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் தான் காரணம்.

வைத்திலிங்கத்திற்கு ஒன்றிய செயலாளர் பொறுப்பிற்கு கையெழுத்து போட்டு கொடுத்தவனே நான்தான். அமைச்சராக இருந்த போது அம்மாவை ஏமாற்றிவர்தான் வைத்திலிங்கம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த போது அம்மாவுக்கே தெரியாமல் கம்பெனிகளுக்கு அனுமதி வழங்க கமிஷன் கேட்டு ஊழல் செய்துள்ளார். இதில் இருந்து தப்பிக்கத் தற்போது திமுகவின் பி டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சாதாரண ஒன்றிய செயலாளராக இருந்தவருக்கு எங்கிருந்து ஸ்கூல், காலேஜ், மூப்பனாரையே மிஞ்சும் அளவிற்கு டெல்டாவில் சொத்து உள்ளிட்டவை வந்தது. டிடிவி, ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றவர்கள் பொய்கால் குதிரைகள்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in