சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன சிக்கல்?- நீதிபதி காட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதில் என்ன சிக்கல் உள்ளது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. திமுக ஆட்சி அமைந்த பிறகு குறிப்பிட்ட நிகழ்வுகளை மட்டும் நேரலை செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசுக்கு தேவையான தகவல்களை மட்டும் நேரலை செய்வதாக கூறி, எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் எனக்கோரி, அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மட்டும் நேரலை செய்வதாகவும், அனைத்து நிகழ்வுகளையும் முழுமையாக நேரலை செய்வது சாத்தியமில்லை எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நேரலை செய்வதில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார். இது குறித்து விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கி, வழக்கை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in