கடும் கட்டுப்பாட்டுகளுடன் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி... உயர் நீதிமன்றம் கறார் உத்தரவு!

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் (கோப்பு படம்)
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் (கோப்பு படம்)
Updated on
2 min read

வருகிற 22 மற்றும் 29-ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமி மற்றும் தேசிய தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் (கோப்பு படம்)
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் (கோப்பு படம்)

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கும் ஆர்எஸ்எஸ் விண்ணப்பத்தில் போதிய தகவல்கள் குறிப்பிடவில்லை எனவும், தேவாலயம், மசூதி, திராவிடர் கழக அலுவலகம் இருக்கும் வழிகளில் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது என உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. அதற்கு, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கடமை என நீதிபதி கூறினார்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் (கோப்பு படம்)
ஆர்எஸ்எஸ் ஊர்வலம் (கோப்பு படம்)

இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் மறு விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு நிபந்தனைகளுடன் வருகிற 22 மற்றும் 29-ம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை அழைத்து, காவல்துறையினர் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நிலவரப்படி, நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்வலத்தில் சீருடை இல்லாத யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் போலீஸார் விதிக்கும் நிபந்தனைகளை தீவிரமாக பின்பற்றுவதோடு, அமைதியான முறையில் ஊர்வலம் நடத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அக்.22-ம் தேதி நடக்கும் ஊர்வலத்தின் வழித்தடத்தை அக்.20-ம் தேதிக்குள்ளும், அக்.29-ம் தேதி ஊர்வல வழித்தடத்தை அக்.24-ம் தேதிக்குள்ளும் முடிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in