எந்நாளும் போற்றி வணங்குவோம்... நடிகர் விஜய் அன்னையர் தின வாழ்த்து!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும்,  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய், தாய்மார்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார். 

வருடந்தோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாகக்  கொண்டப்படுகிறது. தாய்மையின் தியாக வாழ்க்கையை நினைவுகூரும் தினமாக இது போற்றப்படுகிறது. தாய்மையின் தன்னலமற்ற தியாகத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.  நம்மை பெற்றெடுத்தபோது மகிழ்ந்ததை காட்டிலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அவருக்கு அளிப்பதாக நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதுதான் இந்த தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் ஆகும்.

அன்பையும், அரவணைப்பையும் அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம் போல் தன்னலமின்றி அளிக்கும் தியாக உருவின் பிறப்பிடமான தாய்மார்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர். 

அந்தவகையில் நடிகர் விஜய் தாய்மார்களுக்கு தனது அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 'அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து குடும்பத்திற்காகவும்,  குழந்தைகளுக்காக தன்  வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் போற்றி வணங்குவோம்' என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in