பாலத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட ஆ.ராசாவின் உருவபொம்மை: நெல்லையில் பரபரப்பு

பாலத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட ஆ.ராசாவின் உருவபொம்மை: நெல்லையில் பரபரப்பு

திமுக எம்பி ஆ.ராசா இந்துக்களைக் அவதூறாகப் பேசியிருப்பதாக சர்ச்சை கிளப்பியுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலியில் ஆ.ராசாவின் உருவபொம்மையை சிலர் தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரியார் திடலில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா இந்து மதம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தார். அவரின் பேச்சு இந்துக்களிடையே கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்து அமைப்புகள் ஆ.ராசாவுக்கு எதிராக போராட்டம், காவல் நிலையத்தில் புகார் என தொடர்ந்து களமாடி வருகின்றன.

இந்நிலையில், இன்று காலையில் வி.எம்.சத்திரம் நான்கு வழிச்சாலை பாலத்தின் நடுவில் திமுக எம்.பி ஆ.ராசாவின் உருவப்பொம்மையை மர்மநபர்கள் சிலர் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். அதன் அருகிலேயே இந்து பெண்களை விபச்சாரி எனக் கூறிய திமுக எம்.பி ஆ ராசாவை தூக்கிலிடு. இந்து முன்னணி என்னும் பதாகையும் கிடந்தது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் வி.எம் சத்திரம் போலீஸார் விரைந்து வந்து உருவபொம்மையை அப்புறப்படுத்தினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in