அதைக் கண்டிக்கலைன்னா மணிப்பூர் சம்பவத்தையும் கண்டிக்காதீங்க! - எச்.ராஜா

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு, கோயில் இடிப்பு உள்ளிட்ட திமுக அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மேற்கு வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளரை நிர்வாணப்படுத்திய திரிணமூல் குண்டர்கள், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இதை யாராவது கண்டித்தார்களா? அதை கண்டிக்கவில்லை என்றால், மணிப்பூர் சம்பவத்தையும் கண்டிக்காதீர்கள்” என்றார்

அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று மேற்குவங்க டிஜிபி சொல்லி இருக்கிறாரே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “அப்படித்தான் நிறைய பேர் சொல்றாங்க. அப்படி நடந்து இருக்கு. எங்க அகில இந்திய மகளிர் அணி தலைவி இதை பற்றி விவரமாக பத்திரிகைக்கு செய்தி கொடுத்து இருக்காங்க” என பதில் அளித்தார் ராஜா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in