எனது 92- வது பிறந்த நாளை சில காரணங்களுக்காக கொண்டாடவில்லை என்று முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சித் தலைவரான ஹெச்.டி.தேவகவுடா அறிவித்துள்ளார்.
இந்தியாவின் 14வது பிரதமராகவும், கர்நாடக மாநிலத்தின் 11-வது முதலமைச்சராகவும் இருந்தவர் ஹெச்.டி.தேவகவுடா. இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான தேவகவுடா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவராக உள்ளார்.
அவருக்கு இம்மாதம் மே 18-ம் தேதி 92 வயதாகிறது. இதுதொடர்பாக தேவகடா வெளியிட்டுள்ள அறிக்கையில், " இம்மாதம் 18-ம் தேதி எனக்கு 92 வயதாகிறது. சில காரணங்களால் நான் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை. எனவே, உங்களுடைய வாழ்த்துகளை எதிர்பார்க்கிறேன்.
கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் விதான் பரிஷத் (மாநிலச் சட்ட மேலவை) தேர்தலின் வெற்றிக்கு கூட்டணி வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் எப்போதும் உங்கள் நம்பிக்கைக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள ஹாசன் மக்களவைத் தொகுதி ஜேடிஎஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை பெரும் ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிஐடி போலீஸ் கூடுதல் டிஜிபி. பிஜய்குமார் சிங் தலைமையில் அந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ம் தேதி பெங்களூருவில் இருந்து ஜெர்மனிக்குத் தப்பித்து தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீஸார், தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராகக்கோரி பிரஜ்வலுக்கு இரண்டு முறை போலீஸார் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில், கடந்த வாரமே ஜெர்மனியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா, பெங்களூருவுக்கு வருவதாக இருந்தது.
இதையடுத்து, பெங்களூரு கெம்பகவுடா, மங்களூரு விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கையாக சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் சென்று பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். ஆனால் பிரஜ்வல் விமான டிக்கெட்டை ரத்து செய்து விட்டார்.
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து நேற்று 12.20 மணி விமானத்தில் புறப்பட்டு, பெங்களூருவுக்கு நள்ளிரவு 1 மணியளவில் பிரஜ்வல் எம்.பி வருவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரை கைது செய்ய போலீஸார் தயாராக இருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய விமான நிலையத்திற்குச் சென்ற சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் ஏமாற்றமடைந்தனர்.
பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா சிக்கியுள்ளது மாநிலம் முழுவதும் ஜேடிஎஸ் கட்சியின் இமேஜ் பெருமளவு பாதித்துள்ளது. அத்துடன் தனது மகன் எச்.டி.ரேவண்ணாவும் பாலியல் வழக்கில் சிறைக்குப் போய் விட்டு ஜாமீனில் வந்துள்ளதால், தேவகவுடா மனமுடைந்து இருக்கிறார்.
அதன் காரணமாக தனது பிறந்த நாளை எப்படி கொண்டாடுவது என்ற சலிப்பிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளார் என்று அவரது கட்சியினர் கூறுகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!
கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!
வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!
'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!