பாஜகவுக்கு அக்னிப்பரீட்சை: குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

பாஜகவுக்கு அக்னிப்பரீட்சை: குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மோர்பியில் சமீபத்தில் பாலம் இடிந்து 135 பேர் இறந்த நிலையில், இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் தேர்தல் அறிவிப்பு வெளிவந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பால விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியப்பின்னர் செய்தியாளர்களிடம் தனது உரையாடலைத் தொடங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கால் நூற்றாண்டு காலமாக பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த சூழலில் 15வது குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் நடைமுறைகள் இப்போது முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளில் மொத்தம் 4.90 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், மொத்தம் 51,782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. குஜராத் தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முன்னிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in