பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதாக வழக்குப்பதிவு: குஜராத்தில் பரபரப்பு

பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதாக வழக்குப்பதிவு: குஜராத்தில் பரபரப்பு

குஜராத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வன்ஸ்தா தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பியூஷ் படேல் மீது நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

குஜராத்தின் பிரதாப்நகரில் இருந்து வந்தேர்வேலா கிராமத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது, ​​கற்களை வீசி தனது காரை சேதப்படுத்த முயன்றதாக பாஜக வேட்பாளர் பியூஷ் படேல் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பியூஷ் படேலின் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் படேலின் ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக பேசிய நவ்சாரி துணைக் காவல் கண்காணிப்பாளர் ஸ்.கே.ராய், “ இதுகுறித்து வன்ஸ்தா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

வன்ஸ்தா தொகுதி பட்டியல் பழங்குடியினரைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையில், 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஆளும் பாஜக குஜராத் மாநிலத்தில் 27 ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைப்பதில் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கின்றன. இத்தேர்தலில் மொத்தம் 39 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன, முதல் கட்ட தேர்தலில் 718 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 70 பெண் வேட்பாளர்கள் உட்பட 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in