கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 38 நிர்வாகிகள் சஸ்பெண்ட்: குஜராத் காங்கிரஸ் அதிரடி

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 38 நிர்வாகிகள் சஸ்பெண்ட்: குஜராத் காங்கிரஸ் அதிரடி

குஜராத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது, மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 17 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 38 நிர்வாகிகளை 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளதாக குஜராத் காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

குஜராத் காங்கிரஸின் ஒழுக்காற்றுக் குழு இந்த மாதம் இரண்டு முறை கூடி, தேர்தலின்போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை 95 பேர் மீது 71 புகார்களைப் பெற்றுள்ளதாக, குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாலுபாய் படேல் தெரிவித்தார். அவர், "கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக நாங்கள் 38 நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளோம். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எட்டு நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் சுரேந்திரநகர் மாவட்டத் தலைவர் ராயபாய் ரத்தோட், நர்மதா மாவட்டத் தலைவர் ஹரேந்திர வாலண்ட், முன்னாள் நந்தோட் எம்எல்ஏ பி.டி.வாசவா உள்ளிட்டவர்களும் அடங்குவார்கள். கடந்த ஆண்டு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 156 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in